நடிகர் தனுஷ் தன் மகன் என வழக்கு தொடர்ந்த நபர் உயிரிழப்பு
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மதுரை மேலுரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்கள் வழக்கு மனுவில் இந்த தம்பதியர் தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
ஆனால் இந்த வழக்குகள் தள்ளுபடியாகின. எனினும் கதிரேசன், மீனாட்சி தம்பதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களது வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் 70 வயதான கதிரேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |