நியூயார்க்கில் பயங்கரமான விபத்தில் சிக்கிய பிரித்தானிய நடிகை! இடுப்பு எலும்பு முறிந்து ஐ.சி.யூ.வில் அனுமதி..
பிரபல பிரித்தானிய இளம் நடிகை கேத்ரின் ப்ரெஸ்காட் மீது சிமெண்ட் லொறி மோதி விபத்துக்கு உள்ளானதில், அவர் தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது நியூயார்க்கில் கடந்த செவ்வாக்கிழமை நடந்துள்ளது. கேத்ரின் ப்ரெஸ்காட்டின் இரட்டை சகோதரியான மேகன் வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது நீண்ட பதிவில், கேத்ரின் தற்போது நியூயார்க் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக வர உயிர் பிழைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவருக்கு இரண்டு இடங்களில் இடுப்பு எலும்பு முறிந்துள்ளது மற்றும் கால்கள், பாதங்கள் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
கேத்ரின் மருத்துவ நிபுணர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டாலும், அவரது இயக்கம் நீண்ட காலத்திற்கு கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மேகன் கூறியுள்ளார்.
அவர் சரியான முறையில் கவனிக்கப்பட்டால் முழுமையாக குணமடைவாள் என்று மருத்துவர்கள் நம்புவதாக கூறிய மேகன், தனது சகோதரி தற்போது 'நியூயார்க்கில் தனியாக குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல்' இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லண்டனைச் சேர்ந்த கேத்ரின் ப்ரெஸ்காட் 2008 முதல் பல திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். 30 வயதாகவும் அவர் 'Skins' மற்றும் 'Finding Carter' ஆகிய தோகைக்காட்சி தொடர்களுக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவரது இரட்டை சகோதரி மேகன் ஒரு பாடிபில்டர் என்பது குறிப்பிடத்தக்கது.