"அவர் ஒரு மோசமான நடிகர்.." பிரபல நடிகர் குறித்து முன்னாள் காதலி கூறிய ரகசியம்
பிரபல நடிகர் சல்மான் கான் குறித்து அவரது முன்னாள் காதலி பல ரகசியங்களை தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கான் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் ஹீரோவாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நிலையான துணை கிடைக்காமல் தத்தளித்து வருகின்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஒத்துப்போகாததால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு கத்ரினா கைஃபுடன் காதல் வலையில் சிக்கினார்.
ஆனால் அந்த காதலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இந்நிலையில் கத்ரினா கைஃப் தனது முன்னாள் காதலன் பற்றி இதுவரை யாரும் அறியாத ரகசியத்தை தைரியமாக கூறியுள்ளார்.
அவர் கூறியது, நான் முதலில் கமிட் ஆன சாரா படத்திற்கு இரவும், பகலும் பாராமல் கடினமாக உழைத்து நடித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதனால் நான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்தேன்.
இதனை பற்றி எனது காதலன் சல்மான் கானிடம் அழுது கொண்டே பகிர்ந்த பொழுது எனக்கு ஆறுதல் கூறாமல் சிரித்து கொண்டே என்னை கிண்டலடித்தார்.
அப்பொழுது தான் அவரின் உண்மையான முகத்தை நான் புரிந்து கொண்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.