ஜேர்மனியில் பிரபல இந்திய நடிகை: வம்புக்கிழுக்கும் ரசிகர்கள்
பிரபல இந்திய நடிகையான கத்ரீனா கைஃப் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கிருந்து சில புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக, அவரது கணவர் நடித்துள்ள ஒரு பாடல் காட்சியை வைத்து கத்ரீனாவை வம்புக்கிழுத்துள்ளார்கள் ரசிகர்கள்!
வம்புக்கிழுக்கும் ரசிகர்கள்
ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ள பிரபல இந்திய நடிகையான கத்ரீனா கைஃப், அங்கிருந்து சில புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில் கத்ரீனாவின் கணவரான விக்கி கௌஷல், Bad Newz என்னும் திரைப்படத்தில் த்ரிப்தி டிம்ரி என்னும் நடிகையுடன் நடித்துள்ள பாடல் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பாடல் கட்சியில் விக்கியும் த்ரிப்தியும் மிக நெருக்கமாக நடித்துள்ளார்கள்.
அந்த பாடல் காட்சியை வைத்துத்தான் ரசிகர்கள் கத்ரீனாவை வம்புக்கு இழுத்துள்ளார்கள்.
விக்கி, த்ரிப்தி கெமிஸ்ட்ரி அருமையாக இருப்பதாக சிலர் கூற, இந்த நேரத்தில், நீங்களெல்லாம் ரசிக்கும் விக்கி என்னுடையவர் என்பதை நினைவூட்டும் வகையில்தான் கத்ரீனா ஜேர்மனியிலிருந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக மற்றொரு ரசிகர் வேடிக்கையாக கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |