ஜூனியர் உலகக்கோப்பையில் மாஸ் காட்டிய கௌசல் தாம்பே - வைரலாகும் வீடியோ
ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கௌசல் தாம்பே கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்களை சேர்த்து 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ரூஸ் 95 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ரவிகுமார் பந்து வீச்சை இடது பக்க பவுண்டரி லைனை நோக்கி அடித்தார். அங்கு பீல்டிங் செய்துக் கொண்டிருந்த இந்திய வீரர் கௌசல் தாம்பே அந்த கேட்சை முதலில் கோட்டை விட்டு பின் அற்புதமான டைவ் மூலமாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Wonderful catch by Kaushal Tambe?
— CrickUpdates (@UpdateCricket_) February 5, 2022
Best innings played by James Rew
9️⃣5️⃣#U19CWC #Under19WorldCup2022 #INDvENG #CricketTwitter pic.twitter.com/NZbuGHVdGv