கடைசிநாள் ஆட்டம்: வங்காளதேசத்திற்கு 369 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த மேற்கிந்திய தீவுகள்
West indies set 369 runs target to bangladesh: வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 398 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சில்ஹெட்டில் நடந்து வரும் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 398 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, வங்காளதேச அணி 369 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி விளையாடி வருகிறது.
கவேம் ஹாட்ஜ் 142 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 356 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 398 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
369 ஓட்டங்கள் இலக்கு
கவேம் ஹாட்ஜ் (Kavem Hodge) அதிரடியாக 194 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 142 ஓட்டங்கள் விளாசினார். கெவின் விக்கம் 78 ஓட்டங்கள் எடுத்தார்.
டைஜூல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
369 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள வங்காளதேச அணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
