இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் விளாசிய வீரர்! திருப்பி அடித்த மேற்கிந்திய தீவுகள்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கவேம் ஹாட்ஜ் முதல் சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி 416
நாட்டிங்காமின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ஓட்டங்கள் குவித்தது. ஓலி போப் (Ollie Pope) 121 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மிஃய்லே லூயிஸ் 21 ஓட்டங்களும், பிராத்வெயிட் 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
The WI dressing room reactions to @kavemHodge22's maiden Test ton!???#ENGvWI #MenInMaroon pic.twitter.com/d8C3ALcgGs
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
முதல் டெஸ்ட் சதம்
அடுத்து வந்த மெக்கென்சி 11 ஓட்டங்களில் பஷீர் ஓவரில் அவுட் ஆனார். எனினும் அலிக் அதனஸி மற்றும் கவேம் ஹாட்ஜ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடி காட்டிய அதனஸி 99 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Brilliant effort with the bat on Day 2️⃣!?? #ENGvWI | #MenInMaroon | #Apex pic.twitter.com/SVtlApbNhz
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
அதன் பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவேம் ஹாட்ஜ் தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அவர் 19 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் குவித்து வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 351 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜோஷுவா டா சில்வா 32 ஓட்டங்களும், ஜேசன் ஹோல்டர் 23 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர். பஷீர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Bouncing back from the 1st Test with a maiden Test half century!??#ENGvWI | #MenInMaroon | #Apex pic.twitter.com/M3CQ7vxwxV
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
TEST TON MAGIC!??
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
Trent Bridge is on its feet for Hodge's maiden Test Century!✨#ENGvWI | #MenInMaroon | #Apex pic.twitter.com/Ul46egA3bI
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |