பெண்கள் மீது பணத்தை அள்ளி வீசி ஏலத்தில் எடுக்கலாம்! மதுபோதையில் கும்மாளம்... விபரீத வேலையை செய்து சிக்கிய பிரபல தமிழ்ப்பட நடிகை
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் பெண்களை பணக்காரர்களுக்கு ஏலம் விடும் விபரீத வேலை செய்து பிரபல தமிழ்ப்பட நடிகை சிக்கியுள்ளார்.
தமிழில் ஜெய்ஹிந்த், ஐ லவ் யூ டா, காதலன், நடிகை விஜய்யுடன் விஷ்ணு, ராஜ்கிரணுடன் அரண்மனை கிளி போன்ற பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், வில்லியாகவும் நடித்துள்ளவர் கவிதாஸ்ரீ.
1990 களில் பிரபல நடிகர்களுடன் நடித்த அவர் பின்னர் திருமணமாகி சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியை சினிமா படப்பிடிப்புக்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த நடிகை கவிதா ஸ்ரீ அதில் பிரைவேட் பார்ட்டி நடத்தியுள்ளார்.

சினிமா பாணியில் மது விருந்தின் நடுவே துள்ளல் இசையில் மாதுக்களை வலம் வரச் செய்தும், அவர்கள் மீது பணக்கார விருந்தினர் பணத்தை அள்ளி வீச வேண்டும் என்றும், அதிக தொகைக்கு யார் பெண்ணை ஏலம் எடுக்கிறாரோ அவர் அந்த பெண்ணுடன் பார்ட்டியில் ஈடுபடலாம் என்ற அதிர்ச்சி விதிமுறைகளை வைத்துள்ளார்.
மேலும் கவிதா ஸ்ரீ-யின் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது கூகுள் பே அக்கவுண்ட்டிற்கு 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை என்றும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து பண்ணை வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் பார்டியில் ஈடுபட்ட நடிகை கவிதா ஸ்ரீ, 11 பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட 15 ஆண்களை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் பண்ணை வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு அனைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        