என்னை திருமணம் செய்வீர்களா? கிரிக்கெட் போட்டியின் போது காவ்யா மாறனிடம் கேட்ட ரசிகர்... வீடியோ
கிரிக்கெட் போட்டி நடக்கும் போது தென்னாப்பிரிக்க ரசிகர் ஒருவர் காவ்யா மாறனிடம் தன்னை திருமணம் செய்ய சம்மதமா என கேட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
காவ்யா மாறன்
ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தென்னாப்பிரிக்க உள்ளூர் அணியான Sunrisers Eastern Cape அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்ற SA20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காவ்யா மாறன் நேரில் கண்டுகளித்த நிலையில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
Looks like someone needs a bit of help from @Codi_Yusuf on how to propose in the BOLAND. ?#Betway #SA20 | @Betway_India pic.twitter.com/ZntTIImfau
— Betway SA20 (@SA20_League) January 19, 2023
என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?
இதற்கு ஒரு சுவாரசிய காரணம் உள்ளது. அதன்படி போட்டியை புல்வெளியில் அமர்ந்தபடி ரசிகர் ஒரு ரசித்தபடி இருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த அட்டையில், காவ்யா மாறன், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து கெமராக்கள் அந்த ரசிகரை வட்டமடிக்க ஆரம்பித்தது. இந்த வீடியோவை SA20 தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.
crictracker