2024 Kawasaki Ninja 300 பைக் இந்தியாவில் வெளியீடு., KTM RC 390 உடன் போட்டி
ஜப்பானிய பைக் நிறுவனமான கவாஸாகி இந்திய சந்தையில் 2024 Kawasaki Ninja 300 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த Kawasaki Ninja 300 பைக் Candy Lime Green மற்றும் Metallic Moondust Grey ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த பைக்கில் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
2024 கவாஸாகி நிஞ்ஜா-300 இன்ஜின் மற்றும் பவர்
புதிய கவாஸாகி நிஞ்ஜா-300 பைக்கில் 296 cc DOHC, liquid-cooled மற்றும் parallel fuel-injection system கொண்ட 4-stroke 8-valve engine உள்ளது.
இந்த எஞ்சின் 6 கியர் பாக்ஸுடன் டியூன் செய்யப்பட்டுள்ளது, இது 11,000 ஆர்பிஎம்மில் 39bhp பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 26.1NM Torque திறனையும் உருவாக்குகிறது.
KTM RC 390 மற்றும் Yamaha R3 உடன் போட்டி
இது உதவி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக் 17-inch alloy wheelகளுடன் கூடிய tubular diamond-type chassis-ல் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.43 லட்சம் ஆகும்.
இது Aprilia RS 457, KTM RC 390 மற்றும் Yamaha R3 ஆகியவற்றுடன் போட்டியிடும்.
Kawasaki Ninja 300 அம்சங்கள்
சிறந்த செயல்திறனுக்காக, dual-channel ABS, heat management technology, race-derived clutch, high-tensile diamond chassis, assist மற்றும் slipper clutch, dual throttle valve உள்ளிட்ட பல அம்சங்களை இந்த பைக்கில் Kawasaki நிறுவனம் வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2024 Kawasaki Ninja 300