Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX-4R பைக்! 4 சிலிண்டர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள்
Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கின் சிறப்பம்சங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Kawasaki ZX 4R
ஜப்பான் நாட்டை சேர்ந்த சேர்ந்த Kawasaki நிறுவனம் இந்தியாவில் பைக் விற்பனை செய்து வருகிறது. அதுவும், குறிப்பாக நிஞ்சா சீரிஸ் பைக்குகள் இந்தியாவில் பிரபலமானவை.
அந்தவகையில், Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கானது 8.49 லட்சம் ரூபாயில் வெளியாகியுள்ளது. 4 சிலிண்டர் கொண்ட இந்த ZX-4R Ninja பைக்கானது நிஞ்சா 400 மற்றும் நிஞ்சா 650 ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட பைக்காக உள்ளது.
மூன்று வேரியண்ட்கள்
புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கானது மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். அதாவது, Standard, SE மற்றும் RR ஆகும். இதில், தற்போது Metallic Spark Black கலர் ஆப்ஷனில் பேஸ் வேரியண்ட் மட்டுமே வெளியாகியுள்ளது.
மேலும், ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் கொண்டு இந்த பைக்கை கட்டமைத்துள்ளனர். இதன் முன்பக்கம் டயர் 120/70/17 வசதியுடனும், பின்பக்கம் டயர் 160/60/17 வசதியுடனும் உள்ளது.
பிரேக்கிங் வசதி
- நவீன USD ஷோவா SFF BP (Separate Function Fork- Big Piston) போர்க்
- பின்பக்கத்தில் ப்ரீலோட் அடஜஸ்ட் மோனோ ஷாக் சஸ்பென்ஸன் வசதி
- 290mm முன்பக்க டிஸ்க் பிரேக் வசதி
- 220mm பின்பக்க டிஸ்க் பிரேக் வசதி
- டூயல் சேனல் ABS வசதிகள்
கட்டமைப்பு
இந்த பைக்கின் கட்டமைப்பை பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழு LED வசதிகளும், சைடு ஸ்லாங் எக்ஸாஸ்ட் வசதியும், முழு ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் ஸ்டைல் ஆகியற்றைக் கொண்டுள்ளது.
4 சிலிண்டர் என்ஜின்
இந்த பைக்கின் திறனுக்காக 399cc இன்லைன் 4 சிலிண்டர் லீகுய்ட் கூல்டு என்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, 80 BHP பவர், 39 NM டார்க் திறன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |