இங்கிலாந்துக்கு தரமான பதிலடி! முதல் சதம் விளாசிய வீரர்..ஆட்டத்தை முடித்த இருவர்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸில் நடந்தது.
சரிந்த விக்கெட்டுகள்
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் வில் ஜேக்ஸ் (5), ஜோர்டான் காக்ஸ் (1), பேத்தல் (0) மற்றும் லிவிங்ஸ்டன் (6) என அடுத்துடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
The 1st wicket goes to the local boy, Matthew Forde!👏🏾#TheRivalry | #WIvENG pic.twitter.com/7tWnzUcz4B
— Windies Cricket (@windiescricket) November 6, 2024
இதனால் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் பிலிப் சால்ட் (Philip Salt), சாம் கர்ரன் (Sam Curran) கூட்டணி அணியை மீட்டது. சாம் கர்ரன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சேஸ் ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து அரைசதம் விளாசிய சால்ட் 74 (108) ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த மௌஸிலே 57 (70) ஓட்டங்களும், ஓவர்டன் 32 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.
Chase tempts Curran to grab his first of the contest.🏏💪🏾#TheRivalry | #WIvENG pic.twitter.com/7BBd6ZUSKB
— Windies Cricket (@windiescricket) November 6, 2024
அதிரடியில் மிரட்டிய ஜோப்ரா ஆர்ச்சர் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 263 ஓட்டங்கள் எடுத்தது. மேத்யூ போர்டே 3 விக்கெட்டுகளும், ஜோசப் மற்றும் ஷெபர்ட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
கேசி கார்ட்டி முதல் சதம்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் எவின் லீவிஸ் 19 ஓட்டங்களை வெளியேற, பிரண்டன் கிங் (Brandon King) மற்றும் கேசி கார்ட்டி (Keacy Carty) இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இவர்களது கூட்டணி 209 ஓட்டங்கள் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது முதல் சதத்தை பதிவு செய்த கார்ட்டி, ஆட்டமிழக்காமல் 114 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் எடுத்தார்.
🏏 Keacy Carty makes history, the first batter from Sint Maarten 🇸🇽 to score a 💯 for the #MenInMaroon! 🙌🏾#TheRivalry |#WIvENG pic.twitter.com/Weu84Yzdiy
— Windies Cricket (@windiescricket) November 7, 2024
பிரண்டன் கிங் 117 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் 2-1 என கைப்பற்றியது.
The Supreme King!👑#TheRivalry | #WIvENG pic.twitter.com/kbwD6L20bX
— Windies Cricket (@windiescricket) November 6, 2024
பிரண்டன் கிங் ஆட்டநாயகன் விருதையும், மேத்யூ போர்டே (Matthew Fode) தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |