கபாப் உணவகத்தால் பாதிப்புக்குள்ளான வாடிக்கையாளர்கள்... சிறுவன் உட்பட பலர் மருத்துவமனையில்
தெற்கு வேல்ஸில் கபாப் கடை ஒன்றில் இருந்து உணவு வாங்கிச் சென்ற 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷிகெல்லா பாக்டீரியா
வாடிக்கையாளர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் கபாப் கடை உரிமையாளர்கள் 10,000 பவுண்டுகளுக்கு மேல் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
11 வயது சிறுவன் உட்பட 11 வாடிக்கையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெற்கு வேல்ஸில் Abergavenny பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது Marmaris கபாப் கடை.
இந்த உணவகத்தை 46 வயதான Sami Abdullah மற்றும் 38 வயதான Hassan Saritag ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் உணவகத்தில் சாப்பிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவை வாடிக்கையாளர்கள் சாப்பிட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்துல்லா மற்றும் சரிதாக் ஆகிய இருவரும் முன்னர் பாதுகாப்பற்ற உணவை கடையில் வைத்ததற்காகவும், உணவு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றத் தவறியதற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
கடையை மூடுவதற்கு
நீதிமன்ற விசாரணையில், இந்த சம்பவம் வாடிக்கையாளர்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது. 11 வயது சிறுவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதும் வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கெட்டுப்போன கபாப் சாப்பிட்டு பலருக்கு வாந்தி, காய்ச்சல், பயங்கரமான வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் அவர்களின் வயிற்றுப்போக்கில் இரத்தம் வெளியேறியது என அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் நகர நிர்வாகம் அளித்த ஆலோசனையின் அடிப்படையில், கபாப் கடையை மூடுவதற்கு உரிமையாளர்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10,000 பவுண்டுகள் அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |