ஹோல்டர் அணி படுதோல்வி: ருத்ரதாண்டவமாடிய கீமோ பவுல், ரோவ்மன் பௌல்
Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs: கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸை வீழ்த்தியது.
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜமைக்கா கிங்ஸ்மென் 181 ஓட்டங்கள்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
கீமோ பவுல் 36 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும் விளாசினார்.
பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 18 ஓவர்களிகள் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக கெவின் விக்ஹம் 37 ஓட்டங்களும், நவின் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |