நாவூறும் சுவையில் கீரை வடை.., இலகுவாக செய்வது எப்படி?
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கீரை வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 கப்
- வெங்காயம்- 1
- பூண்டு- 6 பல்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன்
- பாலக்கீரை- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்த பாலக்கீரையை நறுக்கி இதில் போட்டு கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடை போல் தட்டி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் கீரை வடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |