தங்கத்தில் நெய்த கீர்த்தி சுரேஷின் திருமணப் புடவை - விலை எவ்வளவு தெரியுமா?
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஸின் திருமண ஆடையில் உள்ள ரகசியம் தெரியவந்துள்ளது.
15 வருட காதல் கதை
தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் பல படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலை திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியானத்தில் இருந்து, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புடவை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷின் திருமணப் புடவை
அனிதா டோங்ரே வடிவமைத்த புடவை, தென்னிந்திய கலாச்சாரத்தின் சாரத்தையும் கைவினைத்திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
405 மணிநேரத்தில் வடிவமைக்கப்பட்ட புடவை பாரம்பரிய கோர்வை நெசவு நுட்பத்தால் ஈர்க்கப்பட்டது.
கடுகு மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களின் அற்புதமான கலவையாகவும், தங்க ஜாரி வடிவியல் சோதனைகள் மற்றும் நுட்பமான இயற்கையால் ஈர்க்கப்பட்ட கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புடவையில் நடிகை கீர்த்தியால் எழுதப்பட்ட இதயப்பூர்வமான கவிதை, புடவையில் நெய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை லட்சங்களில் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |