ஆனந்த கண்ணீரில் கீர்த்தி சுரேஷ் - கோலாகலமாக நடைபெற்ற 15 வருட காதல் திருமணம்!
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஸ் தனது நீண்ட நாள் காதலனை இன்று திருமணம் செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் என்றால் இவரை கூறமுடியும்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றிபெற்று கீர்த்திசுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.
அதற்கடுத்து 'ரெமோ' படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை இன்று திருமணம் செய்துள்ளார்.
15 வருட காதல் திருமணம்
தனது 15 வருட நண்பரான ஆண்டனி தாட்டில் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ஆண்டனி துபாயை சேர்ந்தவர் எனவும், இருவரும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக பத்திரிக்கை வெளியானது.
இந்நிலையில் இன்று (12) கீர்த்தி சுரேஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதோடு , பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |