மனைவியால் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்
நாடாளுமன்ற விதிகளை மீறியிருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விசாரணையை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்டோரியா ஸ்டார்மருக்கான ஆடைகள்
பிரதமரின் மனைவி பயன்படுத்திய சில உயர்தர ஆடைகள் அவரது மிகப்பெரிய தனிப்பட்ட நன்கொடையாளரால் அவரது மனைவிக்காக வாங்கப்பட்டதாக ஒப்புக்கொள்ளத் தவறியதாக கூறப்படுகிறது.
லேபர் கட்சியின் நன்கொடையாளரான Lord Alli என்பவரே விக்டோரியா ஸ்டார்மருக்கான ஆடைகள் மற்றும் தனிப்பட்ட சில பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதுவும், கெய்ர் ஸ்டார்மர் ஜூலை மாதம் பிரதமராக பொறுப்புக்கு வரும் முன்னரும் அதன் பின்னரும் Lord Alli செலவு செய்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 19,000 பவுண்டுகள் மதிப்பிலான ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களை Lord Alli வசமிருந்து பிரதமர் கைப்பற்றியுள்ளார்.
மட்டுமின்றி, தேர்தல் வேளையில் சர் ஸ்டார்மர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய சுமார் 20,000 பவுண்டுகள் Lord Alli செலவிட்டுள்ளார். இதே அளவுக்கு தொகையை தனியாக அலுவலகம் ஒன்று திறக்கவும் ஸ்டார்மருக்கு உதவியுள்ளார்.
நாடாளுமன்ற விதிகளை மீறி
ஆனால் இது தொடர்பில் ஸ்டார்மர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்றே கூறப்படுகிறது. பிரதமர் ஸ்டார்மர் மீது இந்த விவகாரம் தொடர்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் 10 வாரங்களிலேயே விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு ஸ்டார்மரின் நடவடிக்கை உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் முதலாளித்துவ ஆதரவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதன் பின்னர் தற்போது நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |