பிரித்தானிய பிரதமரின் பதவியைக் கவிழ்க்க சதியா? பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய பிரதமரின் பதவியைக் கவிழ்க்க சதி நடப்பதாக பிரதமரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
பிரதமரின் பதவியைக் கவிழ்க்க சதி?
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் பதவியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் சுகாதாரத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இருப்பதாகவும் பிரதமரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

நான் துரோகியில்லை
தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள வெஸ், தான் துரோகி இல்லை என்று கூறியுள்ளார்.
இப்படி தன் மீது குற்றம் சாட்டியுள்ளவர்கள், அதிகம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார் வெஸ்.
இதற்கிடையில், பிரதமர் ஸ்டார்மரின் டிஜிட்டல் அடையாள திட்டம் தனக்கு பிடிக்காததால் வெஸ், சமீபத்தில் அது குறித்து கேபினட் கூட்டத்தில் விமர்சனம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |