அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ள பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமைச்சரவையில் பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார்.
அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்
பிரித்தானிய துணை பிரதமராக பொறுப்பு வகித்த ஏஞ்சலா ரெய்னர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வெளியுறவுச் செயலராக பணியாற்றிவந்த டேவிட் லேம்மிக்கு ஏஞ்சலா வகித்த துணை பிரதமர் பதவியும், நீதித்துறைச் செயலர் பதவியும் கையளிக்கப்பட்டுள்ளன.
டேவிட் வகித்த வெளியுறவுச் செயலர் பதவி, உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த Yvette Cooperக்கும், Yvette Cooper வகித்த உள்துறைச் செயலர் பதவி, நீதித்துறைச் செயலர் பதவி வகித்த Shabana Mahmoodக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
Scottish Secretary பதவி வகித்த Ian Murray மற்றும் Commons Leader பதவி வகித்த Lucy Powell ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் செயலராக இருந்த Steve Reedக்கு வீட்டுவசதித் துறைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், துணை பிரதமர் பதவி வகித்த ஏஞ்சலா ரெய்னர், அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்தில் இரண்டாவது வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு உப கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், ஏஞ்சலா வீடு வாங்கியபோது அவர் அதுதான் தனது முதல் வீடு என்று கூறியிருந்தார்.
ஏஞ்சலாவுக்கு ஏற்கனவே அவரது மகன் பெயரில் ஒரு வீடு உள்ள நிலையில், அவர் இப்போது வாங்கிய வீட்டுக்கு, கூடுதலாக சுமார் 40,000 பவுண்டுகள் உபகட்டணம் செலுத்தியிருக்கவேண்டும்.
ஆனால், அவர் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுவந்தன. அதைத் தொடர்ந்து, தனது துணை பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஏஞ்சலா என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |