விடை பெற்றார் பிரதமர் ஸ்டார்மர்... மன்னர் சார்லசுடன் சந்திப்பு
பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.
விடை பெற்றார் ஸ்டார்மர்...

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி மக்கள் ஆதரவுடன் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற கெய்ர் ஸ்டார்மர், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், ரீஃபார்ம் யூகே கட்சியின் வளர்ச்சி, அரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் சொந்தக் கட்சியினரிடையே ஆதரவை இழந்தது போன்ற பல்வேறு காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் இல்லம் முன் உரையாடிய ஸ்டார்மர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் மாளிகைக்குச் சென்ற ஸ்டார்மர், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தன் ராஜினாமாவை கையளிக்க, மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.

ஸ்டார்மர் பிரதமர் இல்லம் முன் உரையாற்றும் காட்சிகளும், மன்னரை சந்திக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |