வெள்ளை மாளிகை சந்திப்பில் ஜெலென்ஸ்கியுடன் இணையும் கெய்ர் ஸ்டார்மர்: வெளியான அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள சந்திப்பில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைவார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் சந்திப்பு
புடின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை (Donald Trump) சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக ஐரோப்பியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் (Keir Starmer) வெள்ளை மளிகை சந்திப்பில் பங்கேற்க இருக்கிறார்.
உக்ரைனுக்கான ஆதரவு
இதுகுறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
நாளை (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர், மற்ற ஐரோப்பியத் தலைவர்களுடன் இந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கத் தயாராக உள்ளார்.
மேலும், உக்ரைனுக்கான தனது ஆதரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |