உக்ரைன் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பை வெளிப்படையாக எச்சரித்த பிரித்தானியா பிரதமர்
உக்ரைன் விவகாரம் சூடு பிடிக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
பேரழிவில் தள்ள முடியாது
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய - அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஆனால் தொடர்புடைய பேச்சுவார்த்தையில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.
இந்த நிலையில், தங்களின் பங்களிப்பு இல்லாத பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ஏற்பாதாக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்யும் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திற்கும் பிரித்தானிய இராணுவம் உத்தரவாதம் அளிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை ஆப்கானிஸ்தான் பாணி பேரழிவில் தள்ள முடியாது என்றும் ஸ்டார்மர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
அவசர பேச்சுவார்த்தைக்காக
2021ல் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சி என்பது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று என டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியுள்ள ரஷ்யாவுக்கு அதிக சலுகைகளை அமெரிக்கா விட்டுக்கொடுக்க கூடாது என்றும், அது இன்னொரு வரலாற்றுப்பிழைக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
விளாடிமிர் புடின் இன்னொரு நாட்டின் மீது எதிர்காலத்தில் படையெடுக்காமல் இருக்க தற்போதே நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தைக்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாரிஸில் உள்ள எலிசி அரண்மனைக்கு சென்றுள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பில் விளாடிமிர் புடினுடன் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பேச்சுவார்த்தை குறித்து எவ்வாறு பதிலளிப்பது என்பதை ஐரோப்பிய தலைவரக்ள் விவாதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |