கணவன் தாக்கியதால் பொலிசாரை அழைத்த இளம்பெண்,,, ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறிய ஒரு மோசமான சம்பவம்
கனடாவில், வீட்டில் பிரச்சினை என்று பொலிசாரை அழைத்திருக்கிறார் ஒரு இளம்பெண்... ஆனால், உதவிக்கு வந்த பொலிசார் ஒருவர், Kate என்ற அந்த பெண்ணுக்கு உதவுவதை சாக்காக வைத்துக்கொண்டு அவரது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவரது மொபைல் எண்ணையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, Const. Brian Burkett என்ற அந்த பொலிசாரிடமிருந்து Kateக்கு குறுஞ்செய்திகள் வரத்துவங்கியுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக வரைமுறை தாண்டி, ஆபாச புகைப்படங்கள் அனுப்புவதிலிருந்து படுக்கைக்கு அழைப்பது வரை தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் Brian.
ஏற்கனவே வீட்டில் பிரச்சினை, என்ன செய்வது என்று தெரியாமல், குழப்பமும் பயமும் அடைந்த Kate, பெண்களுக்கு உதவும் ஒரு அமைப்பிடம் உதவி கோரியுள்ளார். Brian மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Kate அறுவை சிகிச்சை ஒன்றுக்குப்பின் வீட்டில் ஓய்விலிருந்திருக்கிறார். அப்போது, ஒரு நாள் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த பொலிசார் 10 பேர், Kateஐ தூக்கி பொலிஸ் வாகனத்தில் போட்டு மருத்துவமனை ஒன்றிலுள்ள ஒரு அறையில் கொண்டு அடைத்துள்ளார்கள்.
ஆனால், அவர் அந்த மருத்துவமனையில் இருப்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவரது தாய், வீட்டு உரிமையாளர் சமூக ஆர்வலர் ஒருவர் ஆகியோர் பொலிசாரை அழைத்து விசாரித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். அப்போதுதான், தன் பொலிசார் ஒருவர் மீது புகாரளித்ததும், அதனால்தான் தனக்கு இந்த பிரச்சினை என்பதும் Kateக்கு புரியவந்துள்ளது.
Kate குடும்பம் நீதிமன்றம் சென்றும், அவர்களால் Brian மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலவில்லை. இந்நிலையில், தற்போது, Kate மட்டுமின்றி, சாரா என்னும் மற்றொரு பெண் உட்பட, மொத்தம் 4 பேர், அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை துஷ்பிரயோகம் செய்ததாக Brian மீது குற்றம் சாட்டியுள்ளதால் இனி பிரச்சினை கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.