48 ஓட்டங்களில் சுருண்ட அணி! மிரட்டலான பந்துவீச்சு
மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய யஷ் தலடி ஆட்டநாயகன் விருதை பெற்றார்
கென்யா வீரர் சுக்ஹதீப் சிங் 10 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார்
கென்யாவுக்கு எதிரான டி20 போட்டியில் கேமரூன் அணி 48 ஓட்டங்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.
ஆப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் கென்யா மற்றும் கேமரூன் அணிகள் மோதின. கென்யாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்த கேமரூன் அணி 14.2 ஓவர்களில் 48 ஓட்டங்களில் சுருண்டது.
அந்த அணியில் நான்கு வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கென்யாவின் தரப்பில் ஷெம் ங்கோச்சே, யஷ் தலடி தலா 3 விக்கெட்டுகளையும், ஒலுஒச் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கென்யா அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.