கென்ட் பகுதியை மூடிய கடும் மூடுபனி: 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து
Huge fog pileup in Kent m20 shot after 30 vehicles collide: பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
கென்ட் பகுதியில் 30 வாகனங்கள் மோதி விபத்து
பிரித்தானியாவின் கென்ட்(Kent) பகுதியில் கடுமையான மூடுபனி காரணமாக M20 நெடுஞ்சாலையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சனிக்கிழமை மாலை 6.41 மணியளவில், தலைநகர் லண்டனை நோக்கி செல்லும் வழியான Maidstone அருகிலுள்ள Hollingbourne பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் 11 பேர் வரை காயமடைந்த நிலையில், 2 பேர் பலத்த காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணமாக மூடப்பட்ட சாலைகள்
இந்த விபத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக M20 நெடுஞ்சாலையின் 8 மற்றும் 9க்கு இடைப்பட்ட இரண்டு புற சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
மேலும் விபத்து நடந்த பகுதியில் கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவை சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிறகு கிழக்கே செல்லும் பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் மேற்கே செல்லும் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை மிட்லேண்ட்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.