வீட்டை நாசமாக்கிய பேரழிவு சூறாவளி! இறுகப்பிடித்து உயிர்தப்பிய வயதான தம்பதி
அமெரிக்காவில் பேரழிவு சூறாவளி வீட்டையே துவம்சம் செய்த போதிலும், தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
கெண்டக்கி மாகாணத்தின் லண்டன் நகரைச் சேர்ந்த பால் என்ற நபர், தனது மனைவி கெய்ல் உடன் வசித்து வருகிறார்.
கடந்த 16ஆம் திகதி அன்று, மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று இவர்களின் வீட்டை மோசமாக தாக்கியது.
இதில் வீடு முற்றிலும் சேதமடைந்து நாசமாக, படுக்கையறையில் பால், கெய்ல் தம்பதி ஒருவரையொருவர் இறுகப் பிடித்துக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ஒருவழியாக சூறாவளி தணிந்தபோது, பக்கத்துக்கு வீட்டுக்காரர் விரைந்து வந்து முதிர் தம்பதிக்கு உதவியுள்ளார்.
தீவிர சிகிச்சை
இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கெய்ல் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.
அவர் மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கப்பட்டு, உயிர்காக்கும் கருவியில் வைக்கப்பட்டார். அவரது விலா எலும்புகள், கல்லீரல் மற்றும் நுரையீரலில் சேதம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, வியாழக்கிழமை உயிர்காக்கும் கருவியில் இருந்து அவர் இறுதியாக வெளியே வர முடிந்தது.
மேலும், வாழ்க்கையை புரட்டிப்போட்ட சூறாவளிக்கு பின் தம்பதியர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பால் கடுமையான காயங்கள் மற்றும் கை செயலிழப்பை சந்தித்த போதிலும், தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |