பெண்ணுடன் அலுவலக அறையில்.,நீதிபதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஷெரிஃப்! வெளியான பரபரப்பு தகவல்கள்
அமெரிக்காவில் கென்டக்கி நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி சுட்டுக்கொலை
கடந்த செப்டம்பர் மாதம் கென்டக்கி (kentucky) நீதிபதி கெவின் முல்லின்ஸ் (54) தனது அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஷெரிஃப் ஆக இருந்த 43 வயது ஷான் மிக்கி ஸ்டைன்ஸ் நீதிபதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, பின் கென்டக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்டைன்ஸ் நீதிபதியை துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் மற்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லின்ஸ், ஸ்டைன்ஸ் இருவரும் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்புதான் மதிய உணவிற்காக பிரபல உணவகத்தில் மேசையை பகிர்ந்துகொண்டனர்.
ஸ்டைன்ஸ் தனது பதவிக்காலம் முடிந்தவுடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு பிறகு ஒரு சாட்சி அறிக்கையின்படி, முல்லின்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட அதே அறைகளில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆடியோக்கள்
மேலும், நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை, ஸ்டைன்ஸின் பிரதிநிதிகளில் ஒருவரான சப்ரினா அட்கின்ஸ் என்ற பெண் வைத்துள்ளதாக, பொலிசாரிடம் உள்ள ஆடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அவர் தனது வாக்குமூலத்தில், 'நீதிபதி அலுவலகத்தில்..அவரது அறையிலேயே ஒரு பெண்ணுடன் உறவுகொண்டதை நான் பார்த்தேன்' என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஸ்டைன்ஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டாலும், அது ஒரு கொலைக்குற்றம் இல்லை என்றார். மாறாக, இது உணர்ச்சியின் உஷ்ணத்தில் நிகழ்ந்த ஒன்று என்று அவர் வாதிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |