முகம் பளிச்சென்று மாற கேரளா ஸ்க்ரப்!
பொதுவாகவே பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் கேரளா பெண்கள் பேரழகு தான். கேரள பெண்கள் தங்களுடைய முகபொலிவுக்கு இயற்கை முறையில் தயாரிக்கும் கிரீம்களைதான் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
அதிலும் கேரள பெண்கள் பயன்படுத்தும் கிறீம்கள் பெரும்பாலும் வீட்டில் இயற்கையான முறையில் செய்யப்படும். அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
கேரள பெண்கள் பயன்படுத்தும் மஞ்சள் எலுமிச்சைபழ சாறு, பாசிப்பருப்பு மாவு பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள்
-
பாசிப்பருப்பு மாவு இரண்டு தேக்கரண்டி
-
மஞ்சளை அரை டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
-
சிறிது தண்ணீர்
செய்முறை
-
ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு மாவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
-
பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
-
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்.
-
உலர்ந்த பிறகு முகத்தை கழுவி விடவும்.
சருமத்தை வெண்மையாக்க கற்றாழையை எவ்வாறு கேரள பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
-
கற்றாழை ஜெல்
- எலுமிச்சை சாறு
செய்முறை
-
கற்றாழை மற்றும் எலுமிச்சை கலவை உருவாக்க, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
-
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
- பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
சருமத்தை இளமையாக வைக்க கடலை மாவு கலவையை எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
-
கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு 3 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
- பால் கிரீம் 1 தேக்கரண்டி
செய்முறை
-
கடலைமாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால்கிரீம் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் போலே நன்றாக கலக்கவும்.
-
இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
- பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
- இதே மாதிரி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
கேரள பெண்கள் உருளை கிழங்கு சாறை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
ஒரு பெரிய உருளை கிழங்கு
-
பருத்தி (காட்டன்)துணி
செய்முறை
-
உருளை கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அம்மியில் அரைத்து சாறு பிழிந்து கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
-
இந்த சாறை 4 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில்வைத்து பயன்படுத்தலாம். கெடாமல் இருக்கும்.
-
கிண்ணத்தில் இருக்கும் உருளை கிழங்கு சாறை பருத்தி துணியால் நனைத்து முகத்தில் தடவி 15 முதல் 20 மிடங்கள் உலர விடவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |