நெய்சோறுக்கு அருமையாக இருக்கும் கேரள சிக்கன் கறி.., எப்படி செய்வது?
கேரள உணவுகள் என்றாலே நாம் அனைவரும் விரும்பி உண்ணுவோம்.
அந்தவகையில், கேரளாவின் பிரபலமான நெய்சோறுக்கு அருமையாக இருக்கும் சிக்கன் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1½kg
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- இலவங்கபட்டை- சிறிதளவு
- பிரிஞ்சிப்பூ- சிறிதளவு
- சோம்பு - சிறிதளவு
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 4
- தக்காளி - 2
- மிளகாய் - 3
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, சேர்த்து வதக்கவும்.
பின் இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் கழுவி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து கிளறி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிதளவு கறிவேப்பிலை, புதினா சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை போன்ற மசாலா பொருட்களைச் சேர்த்து தாளித்துக் கொட்டினால் சுவையான கேரள ஸ்டைல் சிக்கன் கறி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |