புற்றுநோய் சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றிருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: நெகிழவைத்த தகவல்
கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருத நிலையில், சமீபத்தில் இயற்கை எய்தினார். அவர் சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றிருந்த நிலையில், அங்கும் மற்றவர்கள் மீது அவர் காட்டிய அக்கறை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அடையாளம் கண்டுகொண்ட மாணவர்கள்
பிராங்க்பர்ட் வழியாக பெர்லின் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சாண்டியை கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்.
உடல் நலம் கடுமையாக பாதிக்கபட்டிருந்த நிலையிலும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்டு பேசிவிட்டே அங்கிருந்து புறப்பட்டுள்ளார் சாண்டி.
Express archives
தேடி வந்த கூட்டம்
அவர் ஜேர்மனி சென்றுள்ள விடயம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையிலும், செய்தி வேகமாக பரவ, ஒரு கூட்டம் மாணவர்கள் ரயில் ஏறி பெர்லின் வந்து சாண்டியை சந்திக்க வந்துள்ளார்கள்.
குடும்பத்தினர், நண்பர்களின் ஆட்சேபனையையும் மீறி, தன்னைக் காணவந்த அனைவரையும் சந்தித்த சாண்டி, தான் யாரையும் சந்திக்காமல் விடவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே அமைதியாகியுள்ளார்.
தன் நண்பர் ஒருவர் வீட்டில் சாண்டி தங்கியிருந்த நிலையில், உடல் நிலை பாடாய்ப் படுத்தினாலும், அங்கிருந்த நேரம் முழுவதும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டதுடன், தான் சாப்பிடப்போகும்போதெல்லாம் மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டார்களா என்பதை உறுதி செய்தபின்னரே சாப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தன் சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றிருந்த நிலையில், அதை இரண்டாம் பட்சமாக வைத்து, தன்னை அவருடன் தங்கவைத்தவருக்கு ஜேர்மனி குளிர் ஒத்துக்கொண்டதா, அவரது குடும்பம் கேரளாவில் எப்படி இருக்கிறது என்பது போன்ற விடயங்களில் அக்கறை காட்டியுள்ளார் சாண்டி.
செவ்வாயன்று சாண்டியின் உயிர் பிரிந்த நிலையில், தனது கடைசி ஆசையாக, தனக்கு அரசு மரியாதை தேவையில்லை என்று அவர் தன் மனைவி பிள்ளைகளிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் அவரது இறுதிச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |