Angioplasty தொடர்பில் கேரள முதல்வர் தெரிவித்த கருத்து: உருவாகியுள்ள சர்ச்சை
Is angioplasty about heart or business? Kerala CM’s stent remarks spark debate; Angioplasty தொடர்பில் கேரள முதல்வர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது.
இதய இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீராக்க பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்று ஆஞ்சியோப்ளாஸ்டி (Angioplasty).
இந்த சிகிச்சைக்கான கட்டணம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவு முதல் சிகிச்சைக்குப் பிந்தைய சேவைகளுக்கான கட்டணம் வரை, 4 லட்ச ரூபாய்க்கும் அதிகம்.
கேரள முதல்வர் தெரிவித்த கருத்து
இந்நிலையில், சமீபத்தில், கேரள முதல்வரான V. D சதீசன், சில மருத்துவமனைகள் இந்த ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சையை தேவையில்லாமல் பண ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

உடனடியாக, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியின் இதயவியல் சிகிச்சைப்பிரிவின் தலைவரான Dr ராஜேஷ் நாயர் முதல்வரின் கருத்தை வரவேற்றிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு ஏற்பட்ட மோசமான மருத்துவமனை அனுபவங்களை மக்கள் பகிரத் துவங்க, சில மருத்துவர்கள் அதை விமர்சிக்க, கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம், தேவையற்ற சிகிச்சைகளைத் தவிர்ப்பது நல்லதுதான் என்றும், ஆனாலும், இப்படி பொதுவாக சந்தேகங்களை எழுப்புவதால் மக்கள் அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகளையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.