17,840 முதலீட்டை எடுக்க 225 ஆண்டுகள்! ரஷ்மிகா மந்தனாவை குறிப்பிட்டு ஷாக் கொடுத்த கேரளா காங்கிரஸ்
அடல் சேது பாலத்தின் விளம்பரத்தை குறிப்பிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு கேரளா காங்கிரஸ் பகிர்ந்து கணக்கு வைரல் ஆகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில், அரபிக் கடலில் 22 கிலோமீற்றர் தூரத்திற்கு 'அடல் சேது' எனும் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதான் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலம் எனும் சிறப்பை பெற்றுள்ளது. இந்த பாலம் குறித்த வீடியோ ஒன்றை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
South India to North India… West India to East India… Connecting people, connecting hearts! ? #MyIndia pic.twitter.com/nma43rN3hM
— Rashmika Mandanna (@iamRashmika) May 16, 2024
அதில் அவர், ''மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது 'அடல் சேது' பாலம்.
இதன்மூலம் இரண்டு மணிநேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி இத்தோடு நிற்கக்கூடாது, வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்'' என கூறியிருந்தார்.
கேரளா காங்கிரஸ் பதில்
இந்த நிலையில், கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதில் கூறும் வகையில், பாலம் குறித்தும் அதன் முதலீடு, கணக்கு குறித்து தரவுகளை பகிர்ந்துள்ளது.
கேரளா காங்கிரசின் பதிவில், ''அன்புள்ள ராஷ்மிகா மந்தனா ஜி, பணம் செல்லும் விளம்பரங்களையும், பினாமி விளம்பரங்களையும் இதற்கு முன் நாடு பார்த்திருக்கிறது. அமலாக்கத்துறை (ED) இயக்கிய விளம்பரத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. நன்றாக வந்திருக்கிறது, சிறந்த வேலை!
உங்கள் விளம்பரத்தில் அடல் சேது காலியாக இருப்பதாய் நாங்கள் கவனித்தோம். கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், மும்பையில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்று முதலில் நினைத்தோம்.
எனவே நாங்கள், மும்பை காங்கிரசில் உள்ள எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சோதனை செய்தோம். ராஜீவ் காந்தி பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பில் அதிக Traffic இருப்பதாக எங்களுக்கு தெரிவித்தனர் மற்றும் குறிப்பாக வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள் என ஒன்றை பகிர்ந்ததுடன், பாலம் குறித்த கணக்குகளையும் பகிர்ந்துள்ளது.
Dear Rashmika Mandanna Ji,
— Congress Kerala (@INCKerala) May 17, 2024
The nation has seen paid ads and surrogate ads before. This is the first time we are seeing an ED-directed ad. It came out well. Good job!
We noticed that the Atal Setu appears practically empty from your ad. Being from Kerala, we initially thought… pic.twitter.com/7pciuNRPVT
ரூ.17,840 கோடி
மேலும், காங்கிரஸ் அரசால் 1,634 கோடி செலவில் கட்டப்பட்ட பாந்தரா - வொர்லி கடல் இணைப்பு 2009யில் திறக்கப்பட்டது. கார் ஒன்று அதில் பயணம் செய்ய 85 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.9.95 கோடி வசூலிக்கப்பட்டது. விரிவான தரவு MSRDC இணையதளத்தில் கிடைக்கிறது.
இப்போது அடல் சேது ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டு, கார் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மிக அதிகமான தொகை மற்றும் பாலம் தொடங்கப்பட்டதில் இருந்து 102 நாட்களில் மொத்தமாக ரூ.22.57 கோடி வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் மாத வருமானம் வெறும் ரூ.6.6 கோடி. இந்த விகிதத்தில், ரூ.17,840 கோடி முதலீட்டை பெற 225 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறியுள்ளது.
அத்துடன் ''இந்த புள்ளி விவரங்களில் புதிய பாலத்தை முயற்சித்து பார்க்கும் மும்பைவாசிகளின் ஆரம்ப உற்சாகமும் அடங்கும். மும்பைவாசிகள் ஏன் பலத்தை பயன்படுத்துவதில்லை என்பது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டாலோ அல்லது அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டாலோ நன்றாக இருக்கும்'' என்றும் ராஷ்மிகா மந்தனாவை கேரளா காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |