உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளில் மெஸ்ஸியின் வெறித்தனமான ரசிகர் தம்பதிக்கு நடந்த திருமணம்! ஆச்சரிய புகைப்படங்கள்
கத்தார் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்த நாளில் கேரள தம்பதி அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஜெர்சியை அணிந்தபடி திருமணம் செய்து அனைவரின் புருவங்களையும் உயரவைத்துள்ளனர்.
கேரள தம்பதி
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை திருவிழா நேற்று முன் தினம் முடிந்த நிலையில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இந்திய மக்களும் உலகக் கோப்பையை ரசித்தனர், அதிலும் கேரள மாநில மக்கள் மிகுந்த உற்சாகமாக கால்பந்து உலகக் கோப்பையை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் அதிரா மற்றும் சச்சின் ஆகிய கேரள ஜோடி கால்பந்து உலகக் கோப்பையின் மீதான தங்கள் அன்பை தனித்துவமான வழியில் வெளிப்படுத்தினார்கள்.
ARUN CHANDRABOSE
திருமணம்
அதன்படி அர்ஜென்டினா ரசிகரான சச்சின், மெஸ்ஸி பெயர் பொறித்த அர்ஜெண்டினா ஜெர்சியையும், மணப்பெண் அதிரா கைலியன் எம்பாப்பே பெயர் பொறித்த பிரான்ஸ் ஜெர்சியும் அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து கால்பந்து இறுதிப்போட்டியை புதுமண தம்பதி கண்டுகளித்தனர்.
shikshanews