நாயை தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற மூவர்! வீடியோ வெளிவந்த நிலையில் நீதிமன்றத்தின் அடுத்தக்கட்ட அதிரடி
கேரளாவில் நாய் ஒன்றை மூன்று பேர் சேர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நீதிமன்றமே வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவரும், இவருடைய சகோதரர்களும் சேர்ந்து கறுப்பு நிற லாப்ரடார் என்ற இனத்தைச் சேர்ந்த நாயை புருனோ என பெயரிட்டு கடந்த 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் புருனோவை மூன்று பேர் படகில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடூரமாக அடித்து கொன்றனர்.
This is heartbreaking!
— Baisakh Kumar Das (@DasBaisakh) July 1, 2021
Wishing for same death penalty for this all mf's.
#JusticeForBruno pic.twitter.com/d62syDlVGg
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் சுனில், சில்வஸ்டர் மற்றும் மைனர் சிறுவன் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் விலங்குகளின் உரிமையை பாது காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பி யார், பி.கோபிநாத் அமர்வு உயிரிழந்த நாய் புருனோவின் பெயரையே, இந்த வழக்குக்கு சூட்டுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.