பலாப்பழம் மூலம் ரூ.16 லட்சம் வருமானம் ஈட்டும் கேரள விவசாயி! யார் இந்த லட்சாதிபதி
இந்திய மாநிலம், கேரளாவைச் சேர்ந்த 76 வயது விவசாயி ஒருவர் பலாப்பழம் மூலம் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.
பலாப்பழ விவசாயி
கேரளாவை சேர்ந்த 78 வயதான விவசாயி தாமஸ் என்பவர், கோட்டயத்தின் சக்கம்புழா கிராமத்தில் பலாப்பழம் பாரடைஸ் பண்ணை ஒன்று வைத்துள்ளார். இவர், பலா சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வருமானத்தை பெறுகிறார். மேலும், அனைத்து செலவுகளுக்கு பிறகும் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்கிறார்.
பலாப்பழம் மீதான தாமஸின் ஆர்வத்திற்கு அவருடைய தந்தையே காரணம். மிகச்சிறந்த பலாப்பழ விதைகளை எப்படி நடவு செய்ய வேண்டும் என அவரது தந்தை, தாமஸிற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
இவர் முதலில் 5 ஏக்கரில் பலாப்பழ சாகுபடியையும், மீதமுள்ள நிலத்தில் ரப்பர் விவசாயத்தையும் செய்து வந்தார். பின்னர், 2015 -ம் ஆண்டு ரப்பர் விவசாயத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் மொத்த நிலத்தையும் பலாப்பழ சாகுபடிக்கு உபயோகித்தார்.
Getty
குறிப்பாக இவர், பலாப்பழ சாகுபடிக்கு புல் மற்றும் மாட்டு சாணத்தை மட்டுமே இயற்கை உரங்களாக பயன்படுத்தினார்.
பலாப்பழ விற்பனை
இவர், பெரிய பலாப்பழ பண்ணையை வைத்திருந்தாலும், இவருக்கு பிரதான வருமானம் உலர்ந்த பழங்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை வாயிலாக மட்டுமே வந்துகொண்டிருக்கிறது.
Getty
அதாவது, காய்ந்த பழுத்த பலாப்பழம் கிலோ ரூ.2,000 -க்கும், காய்ந்த பலாப்பழம் கிலோ ரூ.1,000 -க்கும், உலர்ந்த வாழைப்பழம் கிலோ ரூ.750 -க்கும் விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், பண்ணையில் மொட்டு ஒட்டுதல் முறையை பயன்படுத்தி மரபணு வங்கி ஒன்றை நிறுவி வருகிறார்.
தற்போது, 400 ரகங்களை தாமஸ் நிர்வகிக்கிறார். மொத்தம் இவரது சேகரிப்பில் வியட்நாம், கம்போடியன், சிந்துரா, சித்து, தேன்வரிகா, சூப்பர் மற்றும் ஆல் சீசன் போன்ற பலாப்பழ வகைகள் உள்ளன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |