மீன் விற்க சென்ற இடத்தில் கோடீஸ்வரரான விபாயாரி.. லொட்டரியால் அடித்த ஜாக்பாட்
மீன் விற்க சென்றிருந்த போது லொட்டரி சீட்டு வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது, சிலருக்கு மட்டுமே கோடிகளிலும், லட்சங்களிலும் அதிர்ஷ்டம் அடிக்கும். அப்படி ஒருவருக்கு தான் கேரளாவில் அடித்துள்ளது.
மீன் வியாபாரி
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட திருவழியோடு பகுதியைச் சேர்ந்தவர் மஜீத். இவர் மீன் வியாபாரி ஆவார். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லொட்டரி சீட்டுகள் வாங்கி வந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்தவொரு பரிசும் விழுந்ததில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நென்மாரா பகுதிக்கு மீன் விற்க சென்றிருந்தார். அங்கு, செந்தாமரை என்பவர் லொட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 5 லொட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார்.
அப்போது அவர் கையில் பணம் இல்லாததால் முன்பணமாக ரூ.10 மட்டும் கொடுத்துள்ளார். மீதியுள்ள பணத்தை மீன் விற்று ரூ.240 -ஐ கொடுத்துள்ளார்.
ரூ.1 கோடி பரிசு
இந்நிலையில், லொட்டரி சீட்டுக்கான முடிவுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் மீன் வியாபாரி மஜீத் வாங்கியிருந்த லொட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர் வாங்கியிருந்த மற்ற 4 லொட்டரி சீட்டுகளுக்கும் தலா ரூ.8 ஆயிரம் பரிசு விழுந்துள்ளது. இவர், நேற்று லொட்டரி சீட்டை வங்கியில் செலுத்தியபோது இந்த தகவல் வெளிவந்ததால் கேரள மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |