காதலனைக் கொல்ல நண்பர்கள் உதவியை நாடிய கேரள இளம்பெண்
A girl in Kerala was arrested alongside four friends for allegedly plotting to murder her boyfriend: தனது காதலனைக் கொலை செய்ய தன் நண்பர்கள் உதவியை நாடிய இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் காதலன் தன் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறி, அவரை கொலை செய்ய, தன் நண்பர்கள் உதவியை நாடியுள்ளார் இளம்பெண்ணொருவர்.
காதலனைக் கொல்ல நண்பர்கள்...

கேரளாவிலுள்ள பாலக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்த சஃபானாவும் (19), இளைஞர் ஒருவரும் காதலித்துவந்துள்ளார்கள்.
ஆனால், தன் காதலர் தன் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதிய சஃபானா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதற்கு அவர் தன் நண்பர்களான நாடியா (20), ரபீபா (25), இர்ஷாத் (28) மற்றும் அசாருதீன் (25) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார்.
அதன்படி நன்கு திட்டமிட்டு, இரவு நேரத்தில் தன்னைக் காண வரும்படி தன் காதலனை சஃபானா அழைக்க, அவருடைய சதித்திட்டத்தை அறியாத அந்த இளைஞர் தன் காதலியை சந்திக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அவரை கார் ஒன்றில் ஏற்றிய சஃபானாவின் நண்பர்கள், அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
படுகாயமடைந்த அவர் இறந்துபோவார் என எண்ணி, சாலையோரம் வீசிச் சென்றுள்ளார்கள் அவர்கள்.
ஆனால், பிழைத்துக்கொண்ட அந்த இளைஞர், எப்படியோ பொலிசாரை தொடர்புகொண்டு, நடந்த பயங்கரம் குறித்து விளக்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலை அந்த இளைஞரைத் தாக்கிய ஐந்து பேரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஐந்துபேரும் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், சஃபானாவின் நண்பர்களான இர்ஷாதும் அசாருதீனும், ஏற்கனவே போதைக் கடத்தல், கொலை முயற்சி உட்பட பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும், சிறை சென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.