மருத்துவமனையிலிருந்து வெளியேறிய கேரள இளம்பெண்: சிறிது நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயரம்
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து தானாகவே வெளியேறிய அவர், அருகிலுள்ள மரங்கள் அடந்த பகுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அபூர்வ பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண்
இங்கிலாந்தின் Bolton என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த கேரள நாட்டவரான ஈவ்லின் சாக்கோ (Evelin Chacko, 16), oppositional defiant disorder என்னும் அபூர்வ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஈவ்லின், ஒரு நாள் அதிக அளவில் ஒருவகை மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் அவரது தாயாகிய வல்சம்மா (Valsamma John), அவரை Royal Bolton Hospital என்னும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
Image: Facebook
இதற்கு முன்பும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த ஈவ்லின், கோபம் வந்தால், உடனே, தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறுவாராம்.
2020ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ஆம் திகதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவ்லின், 13ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பின், அருகிலுள்ள மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் ஈவ்லின்.
பல்வேறு கவனக் குறைபாடுகள்
ஈவ்லின் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அவர் இறந்துகிடந்த இடத்தினருகில் அவரது மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் தற்கொலை குறித்த விடயங்களை பல மாதங்களாக இணையத்தில் தேடிவந்தது தெரியவந்தது. எனக்கு தற்கொலை எண்ணம் உள்ளது போல் உணர்கிறேன், அதை மறைப்பது எப்படி, தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதத்தில் என்ன எழுதுவது என்பது போன்ற பல விடயங்களை இணையத்தில் தேடியிருக்கிறார் ஈவ்லின்.
Image: Manchester Evening News
ஈவ்லினுக்கு 16 வயதே ஆகும் நிலையில், சிக்கலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும் வயதானவர்கள் அனுமதிக்கப்படும் வார்டில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
ஈவ்லினை பரிசோதித்த மருத்துவருக்கு, அவருக்கு முன்பு தற்கொலை எண்ணங்கள் இருந்ததோ, அவர் தற்கொலைக்கு முயன்றதோ தெரியாது.
மேலும், அவர் தனியாக மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் எங்கிருந்தார்கள் என்பது தெரியவில்லை.
ஆக, ஈவ்லின் முறையாக கவனிக்கப்படவே இல்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில், ஈவ்லினுடைய தற்கொலை தொடர்பில் நீதிமன்ற அதிகாரியின் விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |