பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.
ஒரு வைரல் செய்தி
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கரான ராபர்ட் வெல்ஸை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் உருவான நட்பு காதலாக மலர, தங்கள் காதல் குறித்து தத்தம் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் இருவரும்.
பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதலளிக்க, ஓணம் பண்டிகைக்காக கேரளா சென்ற இருவரும், பாரம்பரிய கேரள திருமண உடையணிந்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
ராபர்ட்டுக்கு இந்திய கலாச்சாரமும், கேரள உணவு வகைகளும் மிகவும் பிடித்திருப்பதாக அஞ்சலி கூற, தங்களுக்கு அமெரிக்க மருமகன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்கிறார்கள் அவரது பெற்றோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |