லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமி இப்போது எப்படி இருக்கிறாள்? குடும்பம் கூறும் செய்தி
லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தி சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அவளது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி
மே மாதம் 29ஆம் திகதி, இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தையான அஜீஷ், தாய் வினயாவுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த லிஸ்ஸல் மரியா (9).
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போது, உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது ஒரு குண்டு பாய்ந்தது.
சிறுமி மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து ஒன்றரை மாதத்துக்கு மேல் ஆன நிலையிலும், மரியாவின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அவளது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவளால் நிரந்தரமாக பேசவோ, முன்போல் நடமாடவோமுடியாமல் போகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குற்றவாளி சிக்கினாரா?
விடயம் என்னெவென்றால், துப்பாக்கியால் சுட்ட நபர் இதுவரை சிக்கவில்லை.
அந்த சம்பவம் தொடர்பாக பல விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர் பொலிசார்.
தற்போது புதிய சில புகைப்படங்களை வெளியிட்டு அந்த நபரைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |