பிரித்தானியாவில் கொல்லப்பட்ட கேரளப்பெண்ணும் பிள்ளைகளும்: இந்திய தூதரகமும் நண்பர்களும் போட்டி போட்டு உதவி
பிரித்தானியாவில் கேரளப்பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அந்தப் பெண்ணின் கணவராலேயே கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.
பெற்றோர் கோரிய உதவி
இங்கிலாந்திலுள்ள Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை காலை அஞ்சுவின் கணவரான சாஜுவால் (52) கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த அஞ்சு மற்றும் பிள்ளைகளுடைய உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வர தங்களிடம் பணம் இல்லை என அஞ்சுவின் தந்தை கதறியதைக் குறித்த செய்திகள் வெளியாகின.
அத்துடன், அவர்களுடைய உடல்களை இந்தியா கொண்டுவர 30,00,000 ரூபாய் செலவாகும் என அஞ்சுவின் குடும்பத்தார் தெரிவித்திருந்தார்கள். இதை அறிந்த Ketteringவாழ் மலையாள சமூகத்தினர், இரண்டே நாட்களில் அந்த தொகையை சேகரித்துவிட்டார்கள்.
இந்திய தூதரகம் அளிக்க முன்வந்துள்ள உதவி
இந்நிலையில், லண்டனிலுள்ள இந்திய தூதரகம் அஞ்சு மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலை அறிந்ததும், Ketteringவாழ் மலையாள சமூகத்தினர் தாங்கள் சேகரித்த பணத்தை பிள்ளைகளை இழந்து வாடும் அஞ்சுவின் குடும்பத்துக்கு கொடுப்பது என முடிவுசெய்துள்ளனர்.