சஞ்சு சாம்சனுக்கு நாளை பிரம்மாண்ட வரவேற்பு விழா: கேரள அரசு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சனை பாராட்டி நாளை கேரள அரசு பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.
உலகக் கோப்பையில் ஜொலித்த சஞ்சு சாம்சன்
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அபாரமாக வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் நாக் அவுட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார்.
அவரை முக்கியமான கடைசி மூன்று போட்டிகளிலும் அரை சதம் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
பிரமாண்ட பாராட்டு விழா
உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவரை கேரள மாநில அமைச்சர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனை பாராட்டி கேரள அரசு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நாளை அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார், அத்துடன் கேரள மாநில விளையாட்டு துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |