கறுப்பு நிறம் குறித்த விமர்சனத்திற்கு.., உருக்கமாக பதிவிட்ட கேரள பெண் ஐஏஎஸ் அதிகாரி
கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், சிலர் தன்னை கறுப்பு நிறம் என்று விமர்சித்ததாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு
கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் கறுப்பு நிறத்தால் எதிர்கொண்ட சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அந்த முகநூல் பதிவில் "கறுப்பு நிறத்தால் பலரும் தங்களை வித்தியாசமாக பார்ப்பதை அனுபவித்துள்ளோம். அதனை கண்டு கொள்ளாமல் உங்களது வேலையை பாருங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனால் ஏற்படும் சங்கடங்களை பலரும் வந்து கூறுகின்றனர்.
திருமணத்திற்கு கூட வெள்ளையாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்கிறார்கள். கறுப்பாக இருந்தாலும் அழகியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இதனை எதிர்த்து போரிட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
என்னை யார் கறுப்பு என்றார்கள் என்பதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. இது தனி மனிதன் மனநிலை அல்ல, சமூகத்தின் மனநிலை.
50 ஆண்டுகளாக இதை அனுபவதித்ததால் என் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள், சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
ஆண்களில் இதனை எதிர்பார்க்க மாட்டார்கள். பெண்களின் நிறம், உருவம் ஆகியவை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என சமூகம் நினைக்கின்றது. கறுப்பில் இருக்கும் அழகு சமூகத்துக்கு தெரிய வேண்டும்.
கறுப்பு நிறத்தை ஹீரோ ஆக்கவேண்டும். என் கணவருக்கு இதை பற்றி தெரியும். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |