பெட்ரோல், டீசல் இவ்வளவு தான் வாங்க முடியும் - கட்டுப்பாட்டை அறிவித்த கேரளா
தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்ய பெட்ரோல், டீசல் வாங்குவதில் கேரள அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாங்க கேரளா கட்டுப்பாடு
மத்திய கிழக்கு போர் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரிய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இணையவழி வகுப்புகளை ஏற்பாடு செய்வதற்கு சில பள்ளிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால், இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேவை திடீரென அதிகரிக்கும்போதும், சில்லறை விற்பனை நிலையங்களில் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்வதற்காக பெட்ரோல் டீசல் வாங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா அறிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக ஒரு நபருக்கு டீசல் 200 லிட்டராகவும், பெட்ரோல் 5,000 ரூபாயாகவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |