கேரள லொட்டரியில் ரூ.80 லட்சத்தை அள்ளிய வட மாநிலத்தவர்.., கட்டட மேஸ்திரிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கேரளா காருண்யா பிளஸ் லொட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கலில் முதல் பரிசான ரூ.80 லட்சத்தை வட மாநில தொழிலாளி வென்றுள்ளார்.
லொட்டரி குலுக்கல்
கேரள அரசின் லொட்டரித்துறை தினம்தோறும் லொட்டரி குலுக்கல்களை நடத்தி வருகிறது. இதனால், தினமும் கோடிகளிலும், லட்சங்களிலும் பரிசுகளை அள்ளுகின்றனர். அந்தவகையில் கேரளா காருண்யா பிளஸ் லொட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் கடந்த 25 -ம் திகதி நடைபெற்றது.
இந்த குலுக்கலுக்கு முதல் பரிசாக ரூ.80 லட்சம் அறிவிக்கப்பட்டது. இதற்கான குலுக்கல் நடைபெற்று முடிந்து முதல் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. லொட்டரி முதல் பரிசான ரூ.80 லட்சம் ரூபாய் PL 633955 என்ற எண்ணுக்கு கிடைத்தது.
இந்த லொட்டரிக்கான டிக்கெட்டை பத்தனம்திட்டா ஏஜென்சியில் உள்ள விமல் தேவ் விசி என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார்.
கட்டட மேஸ்திரி
லாட்டரியில் ரூ.80 லட்சத்துக்கான பரிசை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஒருவர் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஆறுதல் பரிசான ரூ.8,000 வழங்கப்பட உள்ளது.
இவர், கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் கட்டட மேஸ்திரியாக உள்ளார். தினமும் ரூ.800 முதல் 1000 -க்கு லொட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், 25 -ம் திகதியில் நடைபெற்ற குலுக்கலின் போது மட்டும் 12 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒன்றுக்கான பரிசு தான் முதல் பரிசாகும். மற்றொரு டிக்கெட்டுக்கு ஆறுதல் பரிசாக ரூ.8,000 கிடைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |