கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்றவர்.., தன் விவரத்தை வெளியிட வேண்டாம் என கோரிக்கை
கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்ற நபர் ரகசியமாக வங்கிக்கு சென்று டெபாசிட் செய்துவிட்டு தனது விவரத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ரூ.20 கோடி
கேரளா லொட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லொட்டரி விற்பனைக்கு வந்தது.
ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லொட்டரி டிக்கெட்டில் மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது.
இந்நிலையில், இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள நிதித்துறை அமைச்சர் பாலகோபால் தலைமையில் நடைபெற்றது.
இந்த குலுக்கலில் முதல் பரிசான ரூ.20 கோடி, கண்ணூர் மாவட்டத்தில் விற்ற 'எக்ஸ் டி 387132' என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இதில், முதல் பரிசு யாருக்கு விழுந்தது என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று சத்யன் என்பவர் கண்ணூர் மாவட்டம் இரிட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு ரகசியமாக வந்து பரிசு பெற்ற லொட்டரியை டெபாசிட் செய்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது அவர் தனது விவரத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், அவரது விவரங்களை வெளியிட வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |