40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகள்.., குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு சரணடைந்த கேரள நபர்
40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகளை குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு கேரள நபர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.
சரணடைந்த கேரள நபர்
இந்திய மாநிலமான கேரளா, கொய்கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி (53). இவர், 40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகளை குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சமீபத்தில் இவரது மூத்த மகன் விபத்து ஒன்றில் இறந்துள்ளார். மேலும், இளைய மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அதோடு குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளன.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்?
இதற்கு, தான் முன்பு செய்த கொலைகளே காரணம் என்று குற்ற உணர்வினால் காவல் நிலையத்தை அணுகி நடந்த உண்மையை கூறியுள்ளார்.
1986 ஆம் ஆண்டில் முகமது அலி 14 வயதாக இருக்கும் போது 20 வயது இளைஞர் ஒருவரை உதைத்து கால்வாயில் தள்ளினார். இதையடுத்து முகமது அலி அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்.
பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அந்த நபர் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளார். ஆனால், புகார் அளிக்க யாரும் முன்வராத காரணத்தால் ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை பொலிஸார் முடித்து வைத்தனர்.
மேலும், 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கும் ஆதாரம் இல்லாததால் முடித்து வைக்கப்பட்டது. தற்போது, இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |