மொழி தெரியாமல் வழி தப்பிப்போன கேரளாவைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், மேற்கு வங்கத்துக்கு நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், மொழி தெரியாமல் வழி தப்பிப்போக, அவரை திருடன் என நினைத்து அடித்தே கொன்றுவிட்டார்கள் ஒரு கிராம மக்கள்.
கேரளாவைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
கேரளாவைச் சேர்ந்தவரான சுக்தேவ் என்னும் சந்தீப்பை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான ஹீராலால் தாஸ் என்பவர் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

தாஸ் கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும்போது சந்தீப்புடனான நட்பு கிடைக்க, தன் நண்பரை தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் தாஸ்.
இந்நிலையில், கடந்த வாரம் இருவரும் உள்ளூர் சந்தை ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள். அப்போது சந்தீப் வழிதவறி, Sankijahan என்னும் கிராமத்தைச் சென்றடைந்துள்ளார்.
மொழி தெரியாமல் அலைந்துகொண்டிருந்த அவரைக் கண்ட அக்கிராம மக்கள், அவரை திருடன் என நினைத்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள்.
தகவலறிந்து பொலிசாரும் துணை ராணுவத்தினரும் சந்தீப்பை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
என்றாலும், சிகிச்சை பலனளிக்காமல், காயம் காரணமாக உயிரிழந்துவிட்டார் சந்தீப். சந்தீப்பைத் தாக்கியவர்களும், சந்தீப்பை கேரளாவிலிருந்து அழைத்துவந்து அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தாஸும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |