மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை
மகள் மற்றும் மருமகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கேரளாவில் வசித்து வரும் மருத்துவ தம்பதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவ தம்பதி
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பில் ராம் மனோகர்(70) மற்றும் அவரது மனைவி ஷோபா(68) வசித்து வந்துள்ளனர்.
மருத்துவ தம்பதிகளான இவர்கள் கேரளாவின் திருச்சூரில் மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர், வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் இந்த கிளினிக் மூடிவிட்டு கோழிக்கோட்டில் உள்ள அவர்களது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு திருமணமான மகள் ஒருவர் இருந்த நிலையில், அவர் அவ்வப்போது வந்து தன்னுடைய தாய் மற்றும் தந்தையை கவனித்து வந்துள்ளார்.
திறக்காத வீட்டு கதவு
இந்நிலையில் வயதான மருத்துவ தம்பதியின் வீடு திறக்கப்படாமல் இருப்பதை கவனித்து விட்டு அவரது மகளுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுடைய மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அறை ஒன்றில் மருத்துவ தம்பதிகள் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் அவர்களை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்த நிலையில், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், இருவரும் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் கிடைத்த கடிதம்
இந்த சோகமான சம்பவத்தின் இடையே முதிய மருத்துவ தம்பதியின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தங்கள் இருவருக்கும் வயது முதுமை காரணமாக நோய் இருப்பதாகவும், தன்னுடைய மகளும் மருமகனும் தங்களை சிறப்பாக கவனித்து கொண்டாலும், அவர்களுக்கு பாரமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.
Reuters
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கும் நிலையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.